ஆர்டிஜிஎஸ், நெஃப்ட் தளங்களுக்கான விதிமுறைகளில் ரிசர்வ் வங்கி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
வங்கிகள் மூலம் RTGS, NEFT வாயிலாக பணம் அனுப்ப முடிகிறது. இந்நிலையில் பிரீபெய்ட் கார்ட் நிறுவனங்கள், கார்டு நிறுவனங்கள், ஏடிஎம் ஆபரேட்டர்கள், வாலட்டுகள் போன்றவைகளும் வங்கியின் மத்திய கட்டமைப்பை பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி பரிவர்த்தனை நிறுவனங்கள், வாலட்டுகள், கார்டு நிறுவனங்கள் போன்றவை ஆர்டிஜிஎஸ் தளங்களை பயன்படுத்தி செயல்படுத்த முடியும்.
இதன்படி வங்கி சாராத அமைப்புகளையும் ஒரே தளத்துக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது. வங்கி சாரா நிறுவனங்களையும் ஆர்டிஜிஎஸ் மற்றும் NEFT கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதமே ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. மேலும் வங்கி சாரா நிறுவனங்கள் செலவுகளை குறைப்பதோடு, வங்கிகளை சார்ந்திருப்பதும் குறைகிறது. கட்டணங்களை நிறைவேற்றுவதற்கான நேரமும் குறையும். பண பரிவர்த்தனை தாமதமாவது, தோல்வியடைவது போன்றவை தவிர்க்கப்படும்.