Categories
தேசிய செய்திகள்

கூகுள் பே மோசடி… உடனே இதைச் செய்தால் பணம் கிடைக்கும்… கட்டாயம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!!

கூகுள் பே ஆப்பில் பணம் அனுப்பும் போது மோசடி நடைபெற்றால் எப்படி புகார் அளிப்பது என்பதை பற்றி இதில் நாம் தெளிவாக பார்ப்போம்.

2016ஆம் ஆண்டு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு பொதுமக்கள் அனைவரும் தங்களை டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாற்றிக்கொள்ள பல ஆப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. பணம் அனுப்புவது, ரீசார்ஜ் செய்வது கட்டணம் செலுத்துவது அனைத்துமே நம் கையில் உள்ள செல்போன்களில் அடங்கியுள்ளது. இதனால் ரொக்கப் பணத்தை கையில் வைத்திருக்க வேண்டிய எந்த அவசியமும் ஏற்படவில்லை. அலைச்சலும் நேரமும் குறைந்தது.

அமர்ந்த இடத்திலிருந்தே நாம் செல்போன் மூலமாக வேலையை முடித்து விட முடியும். இதனால் ஆன்லைன் பரிவர்த்தனைகள் இந்தியர்களிடையே கடந்த சில ஆண்டுகளில் கடுமையாக அதிகரித்து இருந்தது. அதே போல் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகள் வளர்ச்சி அடைந்துள்ளன. வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் போன்ற சலுகைகள் வழங்கி வருகின்றது. இதில் சிறப்பு அம்சங்கள் பல இருந்தாலும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றது. சில நேரங்களில் நாம் பணம் அனுப்பி போக வேண்டிய நபருக்கு செல்லாமல் வேறு யாருக்காவது சென்று விடும் அல்லது காணாமல் போய்விடும்.

திரும்பி வருவதில் சிக்கல் ஏற்படும். இதுபோல மொபைல் ஆப் மூலமாக பரிவர்த்தனை செய்யும் பொழுது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இதற்கு எப்படி தீர்வு காண்பது என்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும். யாரிடம் சென்று புகார் அளிப்பது? நம்முடைய பணம் திருப்பி கிடைக்குமா? என்று பல சந்தேகங்கள் நமக்கு இருக்கும். அதற்கு தீர்வு உள்ளது. நாம் https://support.google.com/pay/india/contact/report_activity முகவரியில் சென்று புகார் அளிக்க முடியும். இந்த வெப்சைட்டில் இருக்கும் படிவத்தின் மூலமாக சம்பந்தப்பட்ட வங்கிக்கும் கூகுள் பே நிறுவனத்துக்கும் புகாரளிக்க முடியும்.

புகார் அளித்தவுடன் அது சரிபார்க்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கூகுள் பேக் நிறுவனத்தின் டேர்ம்ஸ் & கண்டிசன்ஸ்களுக்கு உட்பட்டு நடவடிக்கை இருக்கும். நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பணம் அனுப்புவதற்கு மட்டுமே பின் நம்பர் தேவைபடும். பணம் பெறுவதற்கு பின் நம்பர் தேவைபடாது.எனவே மோசடியாளர் உங்களுக்கு பணம் அனுப்பும் லிங்க் ஒன்றை அனுப்பி நீங்கள் பணம் பெறுவது போல மோசடி செய்யலாம். இதுபோன்ற சமயங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

Categories

Tech |