Categories
ஆன்மிகம் இந்து

உங்க வீட்டு முன்னாடி… கட்டாயம் இந்தச் செடியை வையுங்க… துஷ்ட சக்தி, விஷ ஜந்துக்கள் கிட்டவே வராது….!!!

நம் வீட்டிற்கு முன்பாக மருதாணி செடியை வைத்தால் அது வாஸ்து தோஷத்தை போக்கிடும் என சாஸ்திரம் கூறுகிறது. அது பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

நம்முடைய வீட்டில் மருதாணி செடி வைப்பது மகாலட்சுமியின் அம்சத்தை குறிக்கும். முதலில் எந்த ஒரு வீட்டில் மருதாணி செடி இருந்தாலும் அந்த வீட்டில் கட்டாயமாக துஷ்ட சக்தி நெருங்கவே நெருங்காது. அதுமட்டுமல்ல பூச்சிகள் நெருங்காது. இதற்கு காரணம் மருதாணி செடியில் இருந்து வரும் வாசம் தான். உங்கள் வீட்டில் எந்த ஒரு பில்லி, சூனியம் போன்ற கெட்ட சக்திகள் நெருங்காமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் வீட்டில் மருதாணி செடி வையுங்கள். இந்த மருதாணியில் உள்ள விதைகளை எடுத்து நன்றாக வெயிலில் காயவைத்து ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை சாம்பிராணி போடும் போது அதில் இதனையும் சேர்த்து போட்டு வீட்டில் தீபம் காட்டினால் கண்ணுக்கு தெரியாத எந்த கெட்ட சக்தியாக இருந்தாலும் அது நீங்கிவிடும். தினமுமே இந்த மருதாணி காய்களை பயன்படுத்துவதால் எந்த தவறும் இல்லை. ஏனெனில் தாந்திரீக வித்தைகளில் இந்த மருதாணி விதைகளை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த தோஷத்தை நீக்கக் கூடிய சக்தி இந்த மருதாணி செடிக்கு உள்ளது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் சிலர் அந்த வீட்டின் வாஸ்து ஒத்துவராமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வளர்த்து வந்தால், அந்த பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

Categories

Tech |