Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம் உரையில் பொதுமக்கள் ஆலோசனை தேவை… பிரதமர் மோடி கோரிக்கை…!!!

சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஆற்றும் உரையில் இடம் பெறும் வகையில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அனுப்பலாம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி 75 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. இதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பாஜக எம்பிக்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரதமர் மோடி கொடி ஏற்றி உரையாற்றவுள்ளார். அதன்படி சுதந்திர தின உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை தெரியப்படுத்தலாம் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் உரையில் சேர்க்கவேண்டிய மக்களின் கருத்துக்களை தெரிவித்த பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி சுதந்திர விழாவில் உங்கள் கருத்துகளை செங்கோட்டையில் ஒழிக்க வேண்டுமென்றால் பிரதமர் உரையில் சேர்ப்பதற்கு @myindia என்ற ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து உங்களது கருத்துக்களை பதிவிடலாம்” என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |