Categories
மாநில செய்திகள்

அதிக மின்கட்டணம் வருகிறதா…? இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்…. அமைச்சர் அதிரடி…!!!

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் ஒவ்வொரு வீடுகளிலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தவகையில் முதல் 100 யூனிட் பயன்படுத்தியிருந்தால் இலவசம். அதற்கு மேல் பயன்படுத்ததியிருந்தால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் மின்சார கட்டணம் வசூலிப்பதில் நூதன மோசடி நடைபெறுவதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவ்வாறு தமிழகத்தில் மின் கட்டணம் இரண்டு மடங்கு மூன்று மடங்கு வந்துள்ளதாக புகார்கள் அதிகமாக எழுந்துள்ள நிலையில் அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக கருதும் நுகர்வோர் 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். அதன் பிறகு மின்வாரிய அதிகாரிகள் நேரடியாக வீடுகளுக்கு வந்து ஆய்வு செய்து கட்டணம் திருத்தம் செய்ய வேண்டியதிருந்தால் செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்

.

Categories

Tech |