உங்கள் ஸ்மார்ட்போனில் பேசுவது சரியாக கேட்கவில்லை என்றால் இந்த டிப்ஸ்களை ட்ரை செய்தால் போது, நல்ல பலன் கிடைக்கும்.
சில சமயம் நமது போன்களில் பேசும்போது குரல் தெளிவாக கேட்காது. இந்தப் பிரச்சினை பலருக்கும் உள்ளது. இதை சரி செய்ய நாம் கடைகளுக்கு கொண்டுபோய் கொடுப்போம். இனி இந்த முறையை பயன்படுத்துங்கள். ஸ்மார்ட்போன்களின் குரல் தரத்தை மேம்படுத்த உங்கள் தொலைபேசியில் மைக்ரோபோன், போன்கள் மற்றும் ஸ்பீக்கர்களை சரிபார்க்க வேண்டியது அவசியம். அவை அழுக்காக இருப்பதால்தான் குரல் சரியாக கேட்காது,
அதற்கு பிரஷ் கொண்டு அந்த ஸ்பீக்கர்களை சுத்தம் செய்யுங்கள். சில நேரங்களில் தொலைபேசியின் பாதுகாப்புக்காக போடப்படும் பேக் கேஸ்களும் தொலைபேசியில் அழைப்பு தரத்தையும் கெடுத்துவிடும். எனவே அடிக்கடி அந்த பேக் கேஸ்களும் எடுத்து சுத்தம் செய்யுங்கள். குரல் அழைப்பு தரத்தை மேம்படுத்த எச்டி அல்லது VoLTE அம்சத்தை இயக்குங்கள். எச்டி தொலைபேசிகளில் செயல்படுத்த பட்டதா இல்லையா என்பதை கண்காணியுங்கள்.
சில ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்கள் இந்த அம்சத்தை உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் தொலைபேசி மிகவும் பழையதாக இருந்தால் இந்த அம்சத்தை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து உங்கள் ஆபரேட்டரை அழைத்து கேட்கவும். நீங்கள் ஒருவருக்கு செல்போனில் அலைக்கும் இடத்தில் சிக்னல் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் wi-fi அழைப்புகளை இயக்கலாம். wi-fi அழைப்புகளில் குரல் மிகவும் தெளிவாக இருக்கும்.