சமையல் சிலிண்டர்க்குக்கான மானியம் பெற ஆதார் அவசியமாக இருக்கிறது. எஸ்.எம்.எஸ். மற்றும் போன் கால் மூலமாகவே மிகச் சுலபமாக ஆதாரை இணைக்கலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம். இண்டேன் நிறுவனம் சமீபத்தில் SMS மற்றும் செல்போன் அழைப்பு மூலமாக ஆதாரை இணைக்கும் வசதியைக் கொண்டுவந்தது. ஆதார் இணைப்புக்கு முதலில் உங்ளுடைய செல்போன் நம்பருடன் சிலிண்டர் ஏஜென்சியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
SMS:
முதலில் உங்களது செல்போன் நம்பரை பதிவு செய்வதற்கு IOC std code என்று டைப் செய்து 1800-2333-555 என்ற இண்டேன் கஸ்டமர் கேர் நம்பருக்கு SMS அனுப்ப வேண்டும்.
இப்போது செல்போன் நம்பர் பதிவானவுடன் ஆதார் இணைப்புக்கு UID Aadhaar number என டைப் செய்து கஸ்டமர் கேர் நம்பருக்கு அனுப்ப வேண்டும். இதன் பின்னர் கேஸ் ஏஜென்சியுடன் ஆதார் இணைக்கப்பட்டுவிடும்.
போன் கால்:
ஆதாரை போன் கால் மூலமாக இணைப்பதற்கு உங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பரிலிருந்து 1800 2333 5555 என்ற எண்ணை அழைக்க வேண்டும். அதில் உங்களது ஆதார் நம்பரைக் கூறினால் சிலிண்டர் இணைப்பில் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும்.
ஆன்லைன்:
ஆன்லைன் மூலமாகவும் உங்கள் ஆதாரை இணைக்க முடியும். ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் சென்று உங்களது முகவரி போன்ற விவரங்களைப் பதிவிட்டு சிலிண்டர் இணைப்பு, கேஸ் ஏஜென்சி, இண்டேன் கேஸ் ஐடி போன்றவற்றைப் பதிவிட வேண்டும்.
இதையடுத்து submit கொடுத்தால் உங்களது செல்போன் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டு submit கொடுத்தால் ஆதார் இணைக்கப்படும்.