இஸ்ரேலில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல் அவிவில் உள்ள ஷெபா மருத்துவ மையத்தில் ஜனாதிபதி Isaac Herzog (61) நேற்று Pfizer தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்தி கொண்டார். மேலும் Pfizer தடுப்பூசியின் இரண்டாவது டோஸை ஐந்து மாதங்களுக்கு முன்பு போட்டுக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை போடுவதற்கான பிரச்சாரத்தை ஜனாதிபதி தொடங்கி வைத்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் இந்த மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடும் பிரச்சாரமானது டெல்டா மாறுபாடு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து மீள்வதற்கு இது மிக முக்கியமான ஒன்றாக திகழும் என்று பிரச்சாரத்தில் Isaac Herzog தெரிவித்துள்ளார்.