Categories
உலக செய்திகள்

மாயமான மலையேறும் பெண்… பிரபல நாட்டில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரித்தானியாவைச் சேர்ந்த Esther Dingley எனும் மலையேறும் பெண் பிரான்சின் மலையடிவாரத்தில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த Esther Dingley (37) என்னும் பெண்ணும், அவருடைய கணவர் Daniel colegate என்பவரும் மலை ஏறுவதை பொழுதுபோக்காக வைத்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரான்ஸ்-ஸ்பெயின் எல்லையில் உள்ள 8,796 அடி உயரம் கொண்ட pico salvaguardia எனும் மலையேறும் summitpost-க்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் Esther Dingley தனியாக சென்றதாகவும் அதன்பிறகு அவரை காணவில்லை எனவும் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் எழுந்தது.

அந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் மற்ற மலையேறும் வீரர்கள் Esther Dingley-வை நவம்பர் மாதம் 22-ஆம் தேதி கடைசியாக பார்த்ததாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எஸ்தர் pico salvaguardia-வில் எலும்பு கூடாக கிடப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அது அவருடைய எழும்புக்கூடு தானா என்பதில் சந்தேகம் எழுந்த நிலையில் எஸ்தரின் தாயாரான Ria Bryant ( 74 ) உடலிலிருந்து DNA மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆய்வாளர்கள் பரிசோதனைக்கு பிறகு அது எஸ்தர் தான் என உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே நவம்பர் 22-ஆம் தேதி எஸ்தர் தனது கணவர் Daniel colegate-க்கு “பிரான்சின் அழகில் வியந்து போய் விட்டேன். ஒரு குளிர்கால அறையானது வெனாஸ்குவில் தஞ்சமடைய கிடைக்கும் என நம்புவதாகவும், எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது பதிவிடுகிறேன் எனவும், லவ் யூ xxx” என மெசேஜ் ஒன்றை அனுப்பியதாக கூறப்படுகிறது. எஸ்தரின் இந்த மரணமானது அவருடைய குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |