தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் இன்று கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசியின் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிஷீயீல்டு தடுப்பூசிக்கு ஆன்லைன் மூலமாக நூறு பேருக்கும், நேரடியாக 200 பேருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு ஆன்லைன் மூலம் 100 பேருக்கும் நேரடியாக 100 பேருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.