இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அமெரிக்காவில் சென்று படித்து அங்கேயே வேலை பார்க்க வேண்டும் என்பது அவர்களுடைய லட்சியக் கனவாக இருக்கிறது. இதனால் ஒருசிலர் கஷ்டப்பட்டு அமெரிக்காவிற்கு சென்று படித்து அங்கேயே வேலை செய்து வருகின்றனர். இதனால் அமெரிக்கர்களின் வேலை பறிபோவதாக அந்நாட்டில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் படிப்பதற்காக அங்கு தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பு முடிந்ததும் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்ற சட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைத் தடுப்பதற்காக இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அமலுக்கு வந்தால் இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.