Categories
உலக செய்திகள்

திபெத் இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் சீனா…. எல்லையில் மும்முரமாக நடைபெறும் பாதுகாப்பு பணி …. பத்திரிக்கையின் மூலம் வெளிவந்த முக்கிய தகவல்….!!

இந்தியாவுடன் இருக்கும் தங்கள் நாட்டு எல்லையை வலுப்படுத்த நினைத்த சீனா திபெத் இளைஞர்களின் உண்மை மாறாத குணத்தை பரிசோதித்த பிறகு அவர்களை குடும்பத்தில் ஒருவர் என்ற அடிப்படையில் ராணுவத்தில் சேர்த்து வருகிறது.

இந்தியா-சீனா எல்லையான Line Of Actual Control என்னும் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திபெத் இளைஞர்களினுடைய உண்மை மாறாத குணத்தை பரிசோதனை செய்து அவர்களை குடும்பத்தில் ஒருவர் என்ற அடிப்படையில் சீனா தங்கள் நாட்டின் ராணுவத்தில் சேர்த்து வருகிறது.

மேலும் சீனா இதனை கட்டாயமாக்கி தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு எடுக்கப்படும் ராணுவ வீரர்களை சீனா, லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் போன்ற வானிலை மிகவும் மோசமாக உள்ள பகுதிகளில் அதிகளவு கண்காணிப்பு பணியில் ஈடுபட செய்யவுள்ளதாக இந்தியா டுடே என்னும் பத்திரிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சீன ராணுவத்தில் இணையும் இவர்களுக்கு சீன மொழி குறித்து கற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |