ஐ.நா. அலுவலகத்தில் தலீபான்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு பலத்தப்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கும் தலீபான்களுக்கும் இடையே போரானது நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் அதில் எந்த பயனும் கிடைக்கவில்லை. மேலும் ஆப்கான் அரசுக்கு உதவியாக இருந்த நேட்டோ படைகள் அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமெரிக்கா படைகள் வெளியேறும் என எதிர்பார்த்த நிலையில் அது தள்ளிப்போனதாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை தலீபான்கன்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட்டில் இருக்கும் ஐக்கிய நாடுகளின் முக்கிய வளாகம் ஒன்று உள்ளது. அந்த வளாகத்தினை தலீபான்கள் தாக்கியதில் ஆப்கான் போலீசார் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் மற்ற காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினால் ஐ.நா. அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.