மறுசுழற்சி முறையில் 96% அசலை தரக்கூடிய தாவர எண்ணெய் அடிப்படையிலான புதிய பிளாஸ்டிக்கை ஜெர்மனி அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
ஜெர்மனி நாட்டின் பல்கலைக்கழகம் ஒன்றிலுள்ள வேதியியல் பொருட்களின் அறிவியல் துறை தலைவர் ஸ்டீபன் என்பவர் சுற்றுச்சூழலுக்கு தீங்கு தரக்கூடிய புதைபடிவ எரிபொருள்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக தாவர எண்ணெய் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பிளாஸ்டிக்கை கண்டறிந்துள்ளார்.
இந்த தாவர எண்ணெய் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிளாஸ்டிக்கை 10 முறை கூட மறுசுழற்சி செய்து கொள்ளலாம் என்று அறிவியலாளர்கள் அறிவித்துள்ளார்கள். மேலும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் கலவை பிணைப்பை கொண்டுள்ளதால் இதனை மறுசுழற்சி செய்வது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்துள்ளது.
மேலும் இந்த பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும்போது 96% அசல் பொருளை தருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு குறித்த தகவல் நேச்சர் என்ற அறிவியல் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.