Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வட்டு எறிதல் : இந்தியாவின் கமல்பிரீத் கவுர் …. இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் வட்டு எறிதல் போட்டியில்  இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 -வது ஒலிம்பிக் போட்டியில்  தற்போது தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்கள் வட்டு எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் இந்திய வீராங்கனை   கமல்பிரீத் கவுர் 64 மீட்டர் தூரம் வட்டு எரிந்து இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தினார். இதனால் முதல் 12 இடங்களுக்குள் நுழைந்த கமல்பிரீத் கவுர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

Categories

Tech |