சிவகாசி அருகே உள்ள ஜமீன் சில்வார்பட்டி என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் இடிந்து தரை மட்டமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெடி விபத்தில் சிக்கியவர் உடல் தூக்கி எறியப்பட்டு மரத்தில் மாட்டிக் கொண்டது. பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மரத்தின்மேல் தொங்கிய உடலை போராடி பத்திரமாக மீட்டனர்.
Categories