ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியில் உள்ளனர்.
பெருவில் சுல்தானா நகர் பகுதிக்கு கிழக்கே பலம் வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நில அதிர்வால் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை வீட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த காட்சியானது தற்போது வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் பெரு நாட்டில் உள்ள பழமை வாய்ந்த சர்ச் மற்றும் இரண்டு வீடு இடிந்து விழுந்ததாகவும் 3 தீயனைப்பு நிலையங்கள் சேதமடைந்துள்ளதாகவும் ஒரு பெண் உயிரிளந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து பெரு நாட்டு அதிபர் பெட்ரோ கேஸ்டில்லோ நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு சேத விவரம் குறித்து ஆய்வு செய்துள்ளார் என அந்நாட்டு சிவில் பாதுகாப்பு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.