Categories
உலக செய்திகள்

முக்கிய பிரபலங்கள் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார்…. தீவிர விசாரணையில் இறங்கிய இஸ்ரேல்…. உறுதியளித்த ராணுவ மந்திரிகள்….!!

என்.எஸ்.ஓ குழுமம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருளின் மூலம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையில் இஸ்ரேல் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்னும் குழுமம் பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து இந்த பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளின் மூலம் இந்தியா உட்பட பல நாடுகளிலிருக்கும் தலைவர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் இஸ்ரேல் நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும் பலவிதமான அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் என்.எஸ்.ஓ குழுமத்தின் மீது புகார் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் அந்த அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

இவ்வாறான சூழலில் பாரிஸ் நாட்டிற்கு சென்ற பிரான்ஸ் ராணுவ மந்திரி மற்றும் இஸ்ரேலின் ராணுவ மந்திரி புகார் தொடர்பான தீவிர விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |