ஹாங்காங்கில், சீனாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஜனநாயக ஆர்வலருக்கு 9 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனா, ஹாங்காங்கை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், கடந்த வருடம் அங்கு சர்ச்சையான தேசிய பாதுகாப்பு சட்டத்தினை நடைமுறைப்படுத்தியது. இச்சட்டம் ஹாங்காங்கினுடைய ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், இச்சட்டம், கடந்த வருடம் ஜூலை மாதத்தில் டாங் யிங் கிட் என்ற 24 வயதுடைய ஜனநாயக ஆர்வலர் மீது பாய்ந்திருக்கிறது. இவர் சீனாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் அவர் காவல்துறையினர் மீது இருசக்கர வாகனத்தை மோதினார் என்றும் தடை செய்யப்பட்ட வாக்கியங்கள் எழுதிய கொடியை வைத்திருந்தார் என்றும், இவரின் மீது தீவிரவாத மற்றும் பிரிவினை குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.