ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் அடானு தாஸ் தோல்வியை தழுவினார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் நடைபெற்ற கால்இறுதி போட்டிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அடானு தாஸ் ,ஜப்பான் வீரர் டகாஹாரு பருகாவா-ஐ எதிர்கொண்டார்.
இதில் 25-27, 28-28, 28-27, 28-28, 26-27 என்ற கணக்கில் அடானு தாஸ் இழந்தார் . இதனால் 6-4 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வீரர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.