டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அன்ஜூம், தேஜஸ்வினி ஆகியோர் தோல்வியடைந்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் தகுதி பிரிவுக்கான போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் அன்ஜூம் மவுத்கில், தேஜஸ்வினி சவந்த் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
இதில் மவுத்கில் 15-வது இடத்தையும் , தேஜஸ்வினி 33-வது இடத்தையும் பிடித்தனர். இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகளே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவர் . இதனால் இருவரும் இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து தோல்வியடைந்து வெளியேறினர்.