இடுப்பை உடுக்கை போன்று வைத்துள்ள பெண்ணிடம் நடத்திய நிகழ்ச்சியில் அவர் கூறிய பராமாரிப்புகளும் ரகசியங்களும் வியப்படைய வைக்கின்றன.
வியட்நாமை சேர்ந்த 26 வயதான பெண் அன் கி ஆவார். இவர் அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இதன் பின்பு பகுதிநேர வேலையாக நடனமாடியும் வருகிறார். இதனையடுத்து புளோரிடா மாகாணத்தில் அன் கி வேலை பார்க்கும் உணவகத்திற்கு துய் ங்கா என்பவர் வருகை புரிந்துள்ளார். இவர் வியட்நாமைச் சேர்ந்த தொலைக்காட்சி பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த அங்கியின் இடுப்பை கண்டு மிகவும் வியப்படைந்துள்ளார். இதனை தொடர்ந்து அன் கி வைத்து நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அன் கி எவ்வாறு தனது இடுப்பை பராமரிக்கிறார். அதன் ரகசியம் என்ன என பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார்.
அதில் கலந்து கொண்டு பேசிய அன் கி “18 வயதில் 50 கிலோ எடையுடனும் என்னுடைய இடுப்பு அளவானது 60 சென்டி மீட்டராகவும் இருந்தது. எனக்கு சிறிய இடுப்பு வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையினால் உடல் எடையின் அளவை குறைக்க பெரிதும் கடினமாக உழைத்தேன். மேலும் அதனை குறைப்பதற்காக நாளொன்றுக்கு ஒரு முறையும் இல்லையெனில் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையும் என்று உணவு உட்கொண்டேன். மேலும் மாவுச்சத்து அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களை இரண்டு ஆண்டுகளாக தவிர்த்தேன்” எனக் கூறியுள்ளார். தற்போது அன் கியின் எடை 37 கிலோவாகும். அவரது இடுப்பு அளவானது 46 சென்டிமீட்டராகும். மேலும் தனது ஆரோக்கியத்தை சமன் படுத்துவதற்காக காய்கறிகள், பழங்கள் போன்ற சத்தானப் பொருட்களை உட்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.