டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்தை பயன்படுத்திய நைஜீரியாவை சேர்ந்த வீராங்கனை பிளஸ் சிங் ஒகாபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மகளிருக்கான 100 மீட்டர் அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிக்கு நைஜீரியாவின் தடகள வீராங்கனை ஒகாபர் தகுதி பெற்றிருந்தார்.
இதற்கு முன்பாக நேற்று நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் 11.05 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து ஒகாபர் முன்னேறி இருந்தார். இந்நிலையில் இவர் உடல் பலத்தை அதிகரிப்பதற்காக ஊக்க மருந்தை பயன்படுத்தி இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் வீராங்கனை ஒகாபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் இன்று நடைபெறும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒகாபர் பங்கேற்க முடியாது.