குக் வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டம் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நடைபெற்றது. இதில் சகிலா, பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, பவித்ரா, தர்ஷா குப்தா, மதுரை முத்து, தீபா ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். மேலும் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, சரத், சுனிதா, சக்தி உள்ளிட்டோர் கோமாளிகளாக வந்து அசத்தினர். இந்த சீசன் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.
இந்த நிகழ்ச்சி மூலம் அஸ்வின், சிவாங்கி, புகழ், தர்ஷா உள்ளிட்ட பலருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ‘குக் வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டம்’ நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான படப்பிடிப்பின் போது அஸ்வின் மற்றும் ரித்விகா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.