உலகின் மிகப்பெரிய கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையிலுள்ள ரத்தினபுரி என்ற இடத்தில் அதிக அளவு ரத்தினங்கள் கிடைக்கின்றன. இதனால் அப்பகுதியை ‘ரத்தின தலைநகரம்’ என்று அழைக்கின்றனர். இதனையடுத்து கமாகே என்பவர் அப்பகுதியில் வசித்து வருகிறார். அவர் ரத்தின கற்கள் விற்கும் வியாபாரம் செய்து வாழ்கிறார். இந்த நிலையில் கமாகே தனது வீட்டின் பின்புறம் தொழிலாளர்களை வைத்து கிணறு ஒன்று தோண்டியுள்ளார். அப்பொழுது அங்கே பெரிய கல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தக் கல்லை சாதாரணமாக நினைத்து பின் பெரியதாக இருப்பதால் அதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதில் உலகிலேயே மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல்லானது கண்டெடுக்கப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர். இந்தக் கல்லின் எடையானது 510 கிலோ ஆகும் . இந்த கல்லானது வெளிர் நீலத்தில் இருந்துள்ளது. மேலும் இது உலக சந்தையில் இந்திய மதிப்பின்படி 745 கோடி ரூபாய் ஆகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ரத்தின வியாபாரி கமாகே கூறியதில் “கிணறு தோண்டும்போது கல் ஒன்று வித்தியாசமாக எங்களுக்கு கிடைத்தது. அதை கண்டதும் நாங்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனோம்” எனக் கூறியுள்ளார்.