Categories
மாநில செய்திகள்

#BREAKING : மகன் , தந்தைக்கு 15 நாள் நீதிமன்ற காவல்…..!!

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தைக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் மற்றும் CBCID போலீசார் தேனி அழைத்து வந்து , இன்று காலை தேனி மருத்துவ கல்லுரி முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் CBCID போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் மாணவனின் தந்தை மற்றும் தாய்யிடம் தனித்தனியாக விசாரணை நடத்திய CBCID போலீசார் மாணவன் உதித் சூர்யாவிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டார்.இதையடுத்து மாணவன் உதித் சூர்யா , மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் மீது ஆள்மாறாட்டம் , கூட்டுசதி , தவறான ஆவணங்களை தயார் செய்தல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து  கைது செய்தனர்.

பின்னர்  கைது செய்யப்பட்ட இருவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தேனி  லட்சுமிபுரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர்.இதில் இருவரையும்  15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |