இஸ்ரேல் அரசு, கொரோனா பரவல் காரணமாக பயணத்தடை விதித்த நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து மற்றும் 3 நாடுகளை இணைத்திருக்கிறது.
இஸ்ரேல் அரசு, கொரோனா தொற்று காரணமாக தங்கள் நாட்டின் குடிமக்களையும், நிரந்தர குடியுரிமை உடையவர்களையும் இந்தியா, கிர்கிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, பிரேசில், பெலாரஸ், அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின், ரஷ்யா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு செல்ல தடை விதித்திருக்கிறது.
இருப்பினும், அந்த நாடுகளுக்கு செல்ல வேண்டுமெனில், விதிவிலக்கு குழுவினரின் சிறப்பு அனுமதியுடன் பயணிக்கலாம். இந்த நாடுகள் மட்டுமன்றி, வேறு 18 நாடுகளுக்கும் பயணிக்க கடும் கட்டுப்பாடுகளை இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்நிலையில், துருக்கி, ஜார்ஜியா சைப்ரஸ் மற்றும் இங்கிலாந்து, போன்ற 4 நாடுகளுக்கு பயணிப்பதற்கும் இஸ்ரேல் அரசு தடை விதித்திருக்கிறது.