Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

பிளஸ் 2 துணை தேர்வை எழுத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 துணை தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: துணைத் தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்ச்சி வழங்கப்படும். தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க நடைமுறைகள் வெளியிடப்படும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் சுய விருப்பத்தின் பேரில் தேர்வு எழுதலாம். ஆனால் தேர்வு முடிவுகளை இறுதியானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |