Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும்…? உயர்நீதிமன்றம் அதிரடி…!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 85% கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூல் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகின்றது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காரணத்தினால் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரணை செய்தபோது உயர்நீதிமன்றம் மாணவர்களிடமிருந்து 75 சதவீத கட்டணத்தை இரு தவணைகளாக வாங்கி கொள்ள உத்தரவு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளால் தொடரப்பட்ட வழக்கு மீண்டும் நேற்று  விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கட்டணத்தை வசூலிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானம் பாதிக்கப்பட்டவர்கள் 75% செலுத்தலாம். மேலும் கட்டணத்தை ஆறு தவணைகளில் வசூலிக்க வேண்டும் என்றும், கடைசி தவணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதிக்குள் செலுத்த வேண உத்தர விட்டுள்ளார். அதே நேரத்தில் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மாணவர்கள் வகுப்பில் சேர்க்காமல் இருக்க கூடாது எனவும் பல தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டு, பள்ளிக் கட்டணம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

Categories

Tech |