Categories
உலக செய்திகள்

இதற்கெல்லாம் அனுமதி கிடையாது..! பிரபல நாட்டில் விதிக்கப்பட்ட தடை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

பெர்லின் நீதிமன்றம் ஜெர்மனியில் கொரோனா ஊரடங்கு எதிர்ப்புப் போராட்டங்களுக்கு தடை விதித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து பெர்லின் அதிகாரிகள் ஊரடங்கு எதிர்ப்புப் போராட்டங்களுக்கு தடை விதித்திருந்த நிலையில் பெர்லின் நீதிமன்றத்திற்கும் இந்த பிரச்சனை எடுத்துச்செல்லப்பட்டது. இந்நிலையில் பெர்லின் நீதிமன்றம் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட 13 போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பலரும் தாங்கள் முகக்கவசம் அணிய போவதில்லை என்று தெரிவித்ததால் காவல்துறையினர் கவலையில் இருந்த நிலையில் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேசமயம் இவ்வாறு போராட்டங்கள் நடத்தினால் டெல்டா மாறுபாடு பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |