குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் மருதம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மருதனின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் அந்த வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி விட்டது. மேலும் இந்த தீ விபத்தில் மருதன் மகளின் கல்லூரி சான்றிதழும் எரிந்து நாசமாகி விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.