மர்மமான முறையில் பெண் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் அனிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோபனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த சோபனா திடீரென மாயமாகி விட்டார். இதனையடுத்து அனிஷ் தனது மனைவியை அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தபோது வீட்டிற்கு அருகே மர்மமான முறையில் சோபனா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோபனாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சோபனாவை யாரும் அடித்துக் கொலை செய்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.