மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிரபு என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பிரபு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் சித்ரா மது குடிக்க கூடாது என பிரபுவை கண்டித்துள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த பிரபு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி விட்டு அறைக்கு சென்றுள்ளார். ஆனால் சித்ரா தனது கணவர் நாடகமாடுகிறார் என நினைத்து அறைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து நீண்ட நேரமாகியும் பிரபு அறையைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த சித்ரா கதவை தட்டியுள்ளார். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிரபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் பிரபுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.