உடற்கல்வி ஆசிரியர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் இலங்காமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு இலங்காமணி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார்.
இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று இலங்காமணியை கையும் களவுமாக பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மகளிர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இலங்காமணியை கைது செய்துள்ளனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.