Categories
உலக செய்திகள்

ஐ.நா வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்…. சமூக விரோதிகளை குற்றம்சாட்டும் அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட தூதரகம்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள ஐ.நா வளாகத்தின் மீது அரசாங்கத்திற்கு எதிரான சில சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்று ஐ.நா தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் நகரிலுள்ள ஐ.நா வளாகத்தின் மீது அரசுக்கு எதிரான சில சமூக விரோதிகள் தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

இவ்வாறு நடந்த தாக்குதலில் பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டதோடு மட்டுமின்றி சில அதிகாரிகள் காயமடைந்துள்ளார்கள். இருப்பினும் சமூக விரோதிகள் நடத்திய இந்த தாக்குதலில் ஐ.நா அதிகாரிகள் எவரும் காயமடையவில்லை என்று ஐ.நா தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையில் ஐ.நா தூதரகம் தலிபான்களை நேரடியாக கூறாமல் சமூக விரோதிகள் என்று தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |