Categories
சினிமா தமிழ் சினிமா

சர்ப்ரைஸாக வெளியாகும் First சிங்கில்… கெத்து காட்டும் வலிமை திரைப்படம்… வெளியான அப்டேட்..!!

வலிமை திரைப்படத்தின் First சிங்கில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தயாராகி வரும் தல அஜித்தின் “வலிமை” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் கார்த்திகேயா, விஜய் டிவி புகழ், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலரும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தினுடைய First லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் பல சாதனைகளையும் படைத்துள்ளது.

மேலும் இந்த படம் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்திலிருந்து First சிங்கில் சர்ப்ரைசாக ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த பாடலின் பெயர் “வேற மாதிரி” என்றும் கூறியுள்ளார். இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |