கீரை ரொட்டி
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு – 1/2 கிலோ
கீரை – 2 கப்
வெங்காயம் – 2
கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசி மாவு, கோதுமை , நறுக்கிய கீரை, வெங்காயம், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பின் இதனை சப்பாத்திக் கல்லில் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு ரொட்டிகளாகச் சுட்டு எடுத்தால் சுவையான கீரை ரொட்டி தயார் !!!