பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தற்போது குறைந்து கொண்டு வருவதால் மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு முதலே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடம் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டு, வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: பள்ளிகள் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட வழிகாட்டுதலைப் பின்பற்றுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்யவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.