இஸ்ரேல் கப்பல் மீது ஓமன் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் வியட்னாமில் சமீபத்தில் நடந்த அணு ஆயுத தயாரிப்பினை குறைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியுற்றதையடுத்து இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து ராணுவம் கடந்த வியாழக்கிழமை அன்று அரபிக்கடலில் ஓமன் அருகே இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு மஸ்கட்டிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் அரபிக்கடலில் வைத்து இஸ்ரேல் நாட்டின் வர்த்தக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் கப்பலில் இருந்த ஊழியர்கள் 2 பேர் இந்த தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.