அமெரிக்காவில் ஐந்து கிலோமீட்டர் தொலைவை தானாகவே ஓடக்கூடிய ரோபோ ஒன்று வெற்றிகரமாக கடந்துள்ளது.
அமெரிக்காவில் ரோபாட்டிக் நிறுவனத்துடன் இணைந்து ஆரிகான் மாநில பல்கலைக்கழகம் உருவாக்கிய “கேஸி” என பெயரிடப்பட்ட ரோபோ ஒன்று ஓடக்கூடிய வடிவில், நிமிர்ந்த மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்த நிலையில் 53 நிமிடங்களில் ஐந்து கிலோமீட்டர் தொலைவினை கடந்துள்ளது.
இதற்கிடையே அந்த ரோபோ ஓட்டத்தின் போது ஏற்பட்ட அதிக வெப்பமாதலின் காரணமாக அதிவேகத்துடன் வளைவுகளில் திரும்பியதால் இரண்டு முறை கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கேஸி திட்டமிட்ட தொலைவை வெற்றிகரமாக கடந்துள்ளது.
இரு கால்களில் இயங்கும் கேஸி போன்ற இந்த ரோபோக்கள் எதிர்காலத்தில் வீடுகளில் உள்ளவர்களுக்கு உதவும் வகையிலும், பொருட்களை டெலிவரி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.