Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பாரபட்சம் வேண்டாம்” விவசாயிகளின் போராட்டம்…. உறுதியளித்த அதிகாரிகள்….!!

விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்ட அதற்கான விலையில்லா உரங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பெயரில் திருவோணம் வட்டார விவசாயிகள் அனைவருக்கும் கடந்த சில நாட்களாக விலையில்லா உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இடையங்காடு, திப்பன்விடுதி உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கு விலையில்லா உரங்களை வழங்க பாரபட்சம் காட்டப்படுவதால் திருவோணம் வட்டார விரிவாக்க வேளாண்மை மையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு வட்டார வேளாண்மை விரிவாக்க இயக்குனரான விஜய் பாபுவிடம் காவல்துறையினரின் முன்னிலையில் முறையிட்டுள்ளனர். அப்போது அதிகாரிகளிடம் விவசாயிகள் விலையில்லா பொருட்களை வழங்குவதற்கு பாரபட்சம் காட்டுவதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின் வேளாண்மை அதிகாரிகள் , உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |