நாளை முதல் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிகள் அமலுக்கு வருகின்றது.
வங்கி பரிவர்த்தனைகளில் புதிய விதிகள் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் சேவைக் கட்டணங்களை உயர்த்தி கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது.கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்படுகிறது. இந்த விதிமுறைகள் ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாகவும், இதர நிதியில்லா பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வங்கி கணக்கு வைத்துள்ள கிளைகளில் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் ஐந்து முறை இலவசமாகவும், அதைத்தாண்டி எடுக்கும் பொழுது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 17 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்த விதிமுறைகள் அனைத்தும் ஆகஸ்ட் 1 அதாவது நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் அடிப்படை சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு நான்கு முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ள முடியும். அதேபோன்று காசோலை பரிவர்த்தனைகளில் 10 லீஃப்கள் வரையில் இலவசமாக பரிவர்த்தனைகள் செய்து கொள்ள முடியும்.