தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் கோவிசீல்டு, கோவேக்சின் ஆகிய இரு வகையான தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில் கோவிசீல்டு தடுப்பூசி போதுமான அளவு இருப்பு இருப்பதால் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது. ஆனால் கோவேக்சின் தடுப்பூசி போதிய அளவு இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி கடந்த 17ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோவேக்சின் முதல் தவணை போட்டுக் கொண்டவர்கள் இரண்டாவது தவணை போடுவதற்கு தாமதமாகியுள்ளது.
இந்நிலையில் 11 நாட்களுக்குப் பிறகு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த கோவேக்சின் தடுப்பூசி மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக நெல்லை மாவட்டத்தில் காலை 8 மணி முதலே மக்கள் கூட்டம் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அலைமோதியுள்ளது. மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் டோக்கன் எண் வரிசைப்படி ஆதார் எண், செல்போன் எண், உள்ளிட்டவற்றை பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 12 மணி அளவில் கோவேக்சின் தடுப்பூசி வந்து சேர்ந்தது. இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
அதன்பின் பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து நெல்லைக்கு வந்த மொத்தம் 3,360 தடுப்பூசிகளில் மீதமுள்ள தடுப்பூசிகள் தடுப்பூசிகள் வைராவிகுளம், முனைஞ்சிப்பட்டி, பெருமாள்புரம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.