இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலுள்ள முக்கிய தலைவர்கள் பெகாசஸ் என்னும் மென்பொருளின் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து என்.எஸ்.ஓ நிறுவனம் அதனை தற்காலிகமாக முடக்கியுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம் பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளை தயாரித்துள்ளது. இந்நிலையில் இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலுள்ள தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறான சூழலில் என்.எஸ்.ஓ நிறுவனம் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்த முடியாதவாறு முடக்கியுள்ளது.
இந்த தகவலை அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் பெகாசஸ் மென்பொருள் முடக்கப்பட்டது குறித்து இஸ்ரேல் நாட்டின் தேசிய பொது வானொலி கூறியதாவது, என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த மென்பொருளை பயன்படுத்த முடியாதவாறு எந்த நாட்டின் வாடிக்கையாளர்கள் எல்லாம் முடக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பான தகவல் வெளியிடவில்லை.
இதற்கிடையே இஸ்ரேல் பெகாசஸ் மென்பொருள் குறித்த புகார் எழுந்த நிலையில், மென்பொருட்களின் விற்பனைக்கு அந்நாடு கட்டுப்பாடு விதித்துள்ளதால் பல நாடுகளும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.