Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இதுதான் காரணம்” பெற்றோர்கள் அளித்த புகார்…. கல்வி அலுவலரின் நடவடிக்கை….!!

மாற்று சான்றிதழ் பெற்ற மாணவன் தேர்ச்சி அடைந்ததாக பிளஸ் -2 தேர்வு முடிவில் வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு பிளஸ்-2 செய்முறைத் தேர்வை அடிப்படையாகக்கொண்டு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு கடந்த 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்று சான்றிதழ் பெற்ற மாணவன் தேர்ச்சி என முடிவு வந்துள்ளது.

இதற்கு உயிரிழந்த மற்றும் மாற்று சான்றிதழ் பெற்ற மாணவர்கள் ஆகியோரின் விவரங்களை நீக்காமல் இருப்பதே காரணமென பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தலைமையாசிரியர் வீரமணி மீது புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன் வீரமணிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் பெற்றோர்-ஆசிரியர் அளித்த புகார் காரணமாக வீரமணி கடந்த பிப்ரவரி மாதம் பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |