Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இந்த வருஷம் திருவிழா நடக்குமா ….? பக்தர்கள் எதிர்பார்ப்பு ….!!!

வேளாங்கண்ணியில்  புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா ஆகஸ்டு மாதம் 29 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள்  நடைபெறும் .

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்தப் பேராலயம் ஆன்மிக சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.  இந்தப் பேராலயத்தின் ஆண்டு  விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு செப்டம்பர் 8-ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா  ஊரடங்கு காரணமாக ஆண்டு விழா நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது ஊரடங்கு தளர்வுகள்  அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆண்டு திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெறுமா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில் பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருவதால் திருவிழா நடைபெறும் என்று பக்தர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

Categories

Tech |