Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் மகேஷ் பாபுவின் ‘சர்காரு வாரி பாட்டா’… தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்… படம் எப்போ ரிலீஸ்?…!!!

மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் தற்போது சர்காரு வாரி பாட்டா படம் உருவாகி வருகிறது. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மகேஷ் பாபுவின் ஜி.எம்.பி புரொடக்சன் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் சர்காரு வாரி பாட்டா படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சிவப்பு நிற காரிலிருந்து செம ஸ்டைலாக இறங்குவது போல மகேஷ் பாபு போஸ் கொடுத்துள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதில் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |