தேனி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் டொம்புச்சேரி கிராமத்தில் கார்த்திக்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகின்றார். இந்நிலையில் கார்த்திக் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமியை வெளியூருக்கு அழைத்து சென்ற கார்த்திக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனை அறிந்து பதறிய பெற்றோர் உடனடியாக குழந்தைகள் நல குழு தலைவர் சுரேஷ் குமாரிடம் தெரிவித்துள்ள நிலையில் அவர் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த சிறுமியை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சிறுமியும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் போலீசார் கார்த்திக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.