ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓமணப் பெண்ணே படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓமணப் பெண்ணே. அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தெலுங்கில் கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் தேவர்கொண்டா, ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பெல்லி சோப்புலு படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
Enjoyed singing #BodhaiKaname along with @sashasublime for @Composer_Vishal from the film #OhManapenne starring @iamharishkalyan & @priya_Bshankar ❤️
🖊️ @Lyricist_Vivek https://t.co/CnKJrxjRl5@KaarthikkSundar @thinkmusicindia— Anirudh Ravichander (@anirudhofficial) July 30, 2021
தற்போது ஓமணப் பெண்ணே படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. ‘போதை கனமே’ என்கிற இந்த அழகிய ரொமாண்டிக் பாடல் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .