குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள மருதூர் தெற்கு ஆண்டியப்பன் காடு பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர் லாரி டிரைவராகவேலை பார்த்து வந்துள்ளார் . இவருக்கு ரம்யா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி ரம்யா நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவலறிந்த வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரம்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர் ..